2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தேக்கு மரக்குற்றிகளைக் கொண்டு சென்ற இருவருக்கு தண்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை டிப்பர் வாகனத்தில் ஏற்றிச்சென்ற இருவருக்கு, தலா 20,000 ரூபாய்  தண்டம் விதித்து நேற்று புதன்கிழமை (08) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களிடமிருந்த மரக்குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு - இலுப்படிச்சேனை வட்டார வன வள அதிகாரி நாகமணி நடேசன் தெரிவித்தார்.

புல்லுமலைப் பிரதேசத்திலிருந்து செங்கலடி - பதுளை வீதி வழியாக டிப்பர் வாகனத்தில் இம்மரக்குற்றிகள் ஏற்றிச்செல்லப்பட்ட போது சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X