2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தொல்பொருள் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புராதன மன்னர்கள் காலத்து தொல்பொருள்; பொக்கிஷங்களை பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து அத்தொல்பொருள் பொக்கிஷங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பிராந்திய புலனாய்வுப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடத்தியபோது, இச்சந்தேக நபர்களிடம் விலை மதிப்பிட முடியாத தொல்பொருள் பொக்கிஷங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இவை வவுனியா நகரிலிருந்து வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதற்காக ஏறாவூர் பிரதேசத்துக்கு கொண்டுவந்து மிக இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர்கள் ஏறாவூர் நகர் மற்றும் மிச்நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர் எனவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X