Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழான நல்லாட்சியில் இரு மொழி சமத்துவம் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென மீன்பிடி மற்றும் நீரகவளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் உருவாகும் என்று நினைத்து எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. பயங்கரவாதம் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படாதவாறே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் முதன்முறையாக உவர் நீர் மீன்வளர்ப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் வகையில் மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இது இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும் உவர் நீர் மீன் உற்பத்தி நிலையமாக கருதப்படுகின்றது. நன்னீர் மீன் உற்பத்தி மேற்கொள்வதை விட மிகவும் கஷ்;டமான பணியாக இதனை கருதமுடியும். இருந்தபோதிலும், அந்த பணியை மேற்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
எங்களின் நாட்டினை விட கடல் எட்டு மடங்கு பெரிதாகவுள்ளபோதிலும், நாங்கள் 2014ஆம் ஆண்டு மட்டும் 77ஆயிரம் மெட்ரிக்தொன் மீனை இறக்குமதி செய்துள்ளோம். 2014ஆம் ஆண்டு 75 ஆயிரம் மெட்ரிக்தொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களில் இந்த உற்பத்தியினை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2500 ஏக்கரில் மீன் வளர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்கான நிதிகளும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு செயற்றிட்டங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளதுடன், அதன் மூலம் இப்பிரதேச இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி அதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதை நோக்கமாக கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் இங்கு பாராட்டு தெரிவித்தார். அதேபோன்று வடமாகாண முதலமைச்சரும் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் முஸ்லிம், தமிழ் மக்களும் அதனை வரவேற்றுள்ளனர். ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையின மக்களும் இதனை வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சியில் இவ்வாறு இரு மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த நாட்டை சிறந்த ஒரு நாடாக கட்டியெழுப்பும் பணியை மேற்கொண்டுவருகின்றார்' என்றார்.
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago