Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்ற கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தத் தவறியதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்கு எதிராக, பெண்ணொருவரால் நிதிக்குற்றச்சாட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சலா கிறிஸ்டின் மயில்வாகனம் என்பவர், தனது சட்டத்தரணியூடாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் ஆரம்ப விசாரணையை, எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னிடம் 150,000 அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக்கொண்டதாகவும் அக்கடன் தொகையில் இன்னமும் 75,981 அமெரிக்க டொலர்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை எனவும் அமெரிக்க வாழ் பிரஜையான குறித்த பெண், தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
எனவே, தனக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணம், வழக்குச் செலவு மற்றும் பணத்துக்கான 10 சதவீத வட்டி என்பவற்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago