Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், துஷாரா
“இந்த நாட்டில், அரசியல் செய்ய வருகின்றவர்களில், நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள், மக்களின் பணத்தைக் களவாடுகின்றார்கள்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும், “நாடளாவிய ரீதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், மக்கள் பணத்தைக் களவாட அல்லது சூரையாட ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன்” என்றும் தெரிவித்த ஜனாதிபதி, “இந்த நாட்டிலே, சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்” என்றார்
மட்டக்களப்பு, மாவடிவேம்பில் நேற்று முன்தினம் (21) மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த நாட்டில் நல்ல படித்தவர்கள், வைத்தியர்கள், பொறியலாளர்கள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள், விஞ்ஞானிகள், குறைவில்லாத வளங்கள், வசதிகள், வாய்ப்புகள் இருந்தும்; ஏன் இந்த நாடு முன்னேறவில்லை என, மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்கள்.
“2008 முதல் 2016 வரை மத்திய வங்கி ஊழல் மோசடியில் ஆயிரக்கணக்கான மில்லியன் பணங்களைக் கையாடல் செய்துள்ளார்கள். வேலை செய்யும் ஏழை மக்களின் ஊழியர் சேமலாபநிதி, வங்கிகளில் உள்ள வைப்பு, பல்லைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில், வாழ்கை வாகனக் காப்புறுதிப் பணம் என்பவற்றை கையாடல் செய்துள்ளார்கள்.
“கள்ளர்களைப் பிடிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கணக்குகளை ஆராய்வதற்காக ஓர் ஆணைக்குழு, அரசியல்வாதிகள் பல மேசடிகளைச் செய்து சம்பாதித்த பணம் பற்றி அறிவதற்கான ஜனதிபதி ஆணைக்குழு என இரண்டு ஆணைக்குழுக்களை, கடந்த வருடம் நியமித்தேன்.
“இந்த ஆணைக்குக்குழுக்களின் அறிக்கைகளின் பிரகாரம் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டிருக்கும் அனைவருக்கும் எதிராகவும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம். எந்தக் கட்சியைச் சார்தவர்களானாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கமாட்டோம்.
“இலவச மருத்துவம், இலவச கல்வி, வீதிகள் குளங்கள் புனரமைப்பதற்காக தொழில் வாயப்புகளை ஏற்படுத்துவதற்காக பணத்தை கையாடல் செய்துள்ளார்கள். இந்த கள்வர்களுக்கு, நான் மன்னிப்பு வழங்கவே மாட்டேன். நீங்களும் மன்னிப்பு வழங்க வேண்டாம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago