Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், துஷாரா
“நாட்டில் சமத்துவத்தின் அடிப்படையில், நிரந்தர சமாதானம் ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், ஒரு புதிய அரசியல் சாசனம் கட்டாயம் தேவை” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வாழைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்ணன்கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் அரசியல் சாசனம் தேவை. நாடு, பல கோணங்களில் பாரிய பின்னடைவுகளை அடைந்திருக்கின்றது. மனித உரிமை, அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக மாத்திரமல்ல. பொருளாதாரத்திலும் பாரிய பின்னடைவை அடைந்திருக்கின்றோம்.
“தாங்க முடியாத கடன் சுமையை இந்த நாடு எதிர்நோக்கி வருகின்றது. இந்நாடு முன்னேற்றமடைய வேண்டுமாக இருந்தால், பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கப்பட வேண்டும். நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டும். பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெற வேண்டும்.
“இதன்மூலமாக, உற்பத்திகள் அதிகரித்து, பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும்.
“பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும். காணாமல் போனோர் சம்பந்தமாக விடிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஓர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பொறாமல் இருப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
“எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் தேசிய பிரச்சனைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவைகள் தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இந்த தீர்மானங்களை அமுல்படுத்துவற்கு, இலங்கை அரசாங்கம் சம்மதம் வழங்கியுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
2 hours ago
2 hours ago