Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள அனைவரும் ஒற்றுமைப்பட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தில் சேவையாற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடனான விசேட சந்திப்பில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு வாழ்கின்ற மூவின மக்களுக்கும் ஏதோவொரு வகையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறான பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்” என்றார்.
கிழக்கின் புதிய ஆளுநரை பயன்படுத்தி, கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவேண்டிய அதிகாரங்களைச் செயல்படுத்துவதற்கும் தீர்க்கப்படாமல் உள்ள முக்கிய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுகளைப் பெறவும் நாம் அனைவரும் பேதங்கள் மறந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வட, கிழக்கு மாகாண சபைகளுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்களில் சிலர் கடும் போக்குடன் செயற்பட்டனர். இதனால் 13ஆவது திருத்த சட்டத்தின் ஊடா,க கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கூட செயல்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago