Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்ளப்பு மாவட்டத்தில் 2020-2021 பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லை, அரச நெல் சந்தைப் படுத்தல் சபையால் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி முதல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்போக நெல் அறுவடைகளை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்வது தொடர்பாக கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் ஏற்பாட்டில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இதன்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன் முதற்கட்டமாக 18 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை, அரச நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொண்டுள்ளதாக சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜீ. நிமால் எக்கநாயக தெரிவித்தார்.
மேலும், இம்மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லைக் களுஞ்சியப்படுத்துவதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள களஞ்சியங்கள் மற்றும் அதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் களஞ்சியங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதவிர, விவசாயிகளின் நெல்லைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மாவட்டத்தில் நவீன முறையில் நெல் காயவைக்கும் 20 இடங்களை தெரிவுசெய்துஈ அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இம்முறை இம்மாவட்டத்தில் 174,919.75 ஏக்கர் வயல் நிலத்தில் 48,394 விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 244,886 மெற்றிக்தொன் நெல் அறுவடை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் சுமார் 10 சதவீதமான நெல்லை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
53 minute ago