2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிர்வாகிகள் தெரிவு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் .எல். அப்துல் அஸீஸ்

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தில், நேற்று முன்தினம் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மேளனத்தின்  கடந்த ஆண்டின் செயற்பாட்டறிக்கை  சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்,  எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. 

மேலும் 2017 நடப்பு  ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவும்  இதில் இடம்பெற்றது.

தலைவர்: வைத்திய கலாநிதி வை.எல்.எம்.யூசுப்,

செயலாளர் : பொறியியலாளர்  எம்.எம்.எம்.நளீம், 

பொருளாளர்: எம்.ஏ.ஜி.எம்.சபீர்,

இணைப்பாளர் : அஷ்ஷேய்க்  ஏ.எல்.எம்.சபீல் ஆகியோர் உட்பட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 35 நிர்வாகிகளும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X