Janu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு- களுவங்கேணி கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் களுவங்கேணி-சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பாலசுந்தரம் ஜெஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஏத்துக்கால் கடல் பகுதியில், புதிய படகு ஒன்றை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக கடலுக்கு சென்றபோது, திடீரென ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக படகு திசைமாறிச் சென்றவேளை சடுதியாக படகிலிருந்து கடலுக்குள் பாய்ந்து படகினை நேர்த் திசைக்கு கொண்டுவர முயன்றபோது ஏற்பட்ட சுழியினால் அவரை இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது .
பின்னர் ஏனைய மீனவர்களின் உதவியுடன் சடலம் மீட்க்கப்பட்டு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையினை நடத்தியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேரின்பராஜா சபேஷ்

2 minute ago
8 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
10 minute ago