Freelancer / 2022 மே 26 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்து.
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பணிமனைக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் குறித்த பரீட்சார்த்தி சமய பாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன், தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் இச்சம்பவத்தில் ஒரே முக தோற்றமுடைய இரண்டு சகோதரர்களும் தத்தமது அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கியுள்ளார்.
மேலும், கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையிலும் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய சந்தேகநபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது இரண்டு நாட்கள் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026