Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம், அதன் உலகளாவிய கல்வி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்தியாவின் காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன், இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக, இலங்கைக் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட பதில் உப வேந்தர் கருணாகரன்,
மேற்படி மூன்று இந்திய பல்கலைக்கழகங்களுடனும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, கல்வி சார் அலுவலர்களின் உற்பத்தித் திறன் விருத்தி மற்றும் உயர்கல்வி, துறை சார் ஆராய்ச்சிகள், பல்கலைக் கழக மாணவர்களின் பாடவிதான அபிவிருத்தி ஆகியன கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி அபிவிருத்திக்கான அமுலாக்கங்களாக அமையும்.
மேலும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், சர்வதேச மட்டத்துக்குத் தமது பட்டமேற்படிப்பை மேற்கொள்வதற்கும், இந்திய இலங்கை மாணவர் கல்வித்துறை ஆராய்ச்சிப் பரிமாற்றம், கலாசார, மொழி பொதுமைப்பாடுகளின் துறைசார் நடவடிக்கைகள் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சிகள் என்பனவற்றையும் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை துணைபுரியும்.
அதேவேளை, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தற்போதிருக்கும் கல்வித்துறைகளுக்கு மேலதிகமாக புதிய பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளும் உள்ளீர்க்கப்படும்.
குறிப்பாக இலங்கை கடலால் சூழப்பட்ட வளங்கொண்ட தீவு என்பதால் கடலக ஆராய்ச்சிக் கல்வி முக்கிய புதிய கல்வித் துறையாகக் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய பல்கலைக் கழகங்கள் இத்துறையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
அதனால் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் இத்துறையில் தமது ஆற்றலை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியில் புகழ்பெற முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago