Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஜனவரி 24 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாளை (25) ஈடுபடவுள்ளனரென, கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கச் செயலாளர் தங்கவேல் சிறிதரன் தெரிவித்தார்
வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக, கிழக்கு பல்லைக் கழக உபவேந்தருக்கு, செயலாளரால் நேற்று (23) அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர் சங்கம், ஒன்றிணைந்த கல்விசார ஊழியர் சங்க ஆணைக்குழுவின் அழைப்புக்கு இணைங்க, அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், எதிர்வரும் 25ஆம் திகதி (நாளை), வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
“வேலைநிறுத்தத்தின் போது நீர், மின்சாரம், கால்நடைகளுக்கு உணவளித்தல், விவசாயத்துக்கு நீர்பாசனம் உள்ளிட்ட அவசியமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும்” என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள், கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், நிர்வாகச் சங்கம், மாணவர் ஒன்றியம், பதிவாளருக்கும் தகவலுக்காக அனுப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago