Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2017 ஜூலை 27 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு — கல்முனை நெடுஞ்சாலையின் கல்லாறு பாலத்தில், தனியார் சொகுசு பஸ்ஸொன்று, இன்று (27) அதிகாலை 5.30க்கு மோதி விபத்துக்குள்ளானதில், 12 பேர் காயமடைந்துள்ளனர் என, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில், பாலத்தில் பல பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளதுடன், பஸ்ஸுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த குறித்த பஸ், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாதையை விட்டு விலகியமையால், இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
சிறுகாயங்களுக்கு உள்ளானவர்கள், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச்சென்றுள்ளனர் எனவும் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .