2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாவனையாளர் சட்டத்தை மீறினர்: 13 நபர்களுக்கு ரூ.36,500 அபராதம்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பாவனையாளர் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களுக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் 36,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

குறித்த வழக்கு மீதான விசாரணை,) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று (29) நடைபெற்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதார் தலைமையிலான குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவர், விலைப் பட்டியல் காட்சிப்படுத்தமை பொருட்களின் விவரங்கள் காட்சிப்படுத்தமை தொடர்பான குற்றங்களுக்காக 11 பேருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டது.

காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு வர்த்தகர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் விலைப் பட்டியல் காட்சிப்படுத்தமை பொருட்களின் விவரங்கள் காட்சிப்படுத்தமை தொடர்பான 11 வர்த்தகர்களுக்கு தலா 1,500 ரூபாயும் அபராதம் செலுத்துமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X