Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
கனகராசா சரவணன் / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
“யுத்ததால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தற்போது பிரதேச அபிவிருத்தியே தேவையாகவுள்ளது. இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பயன்படுத்தி, எமது மக்களின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்” என, ஜக்கிய தேசியக் கட்சியின் வாழசைச்சேனை வட்டாரத்தில் போட்டியிடும் பஞ்சாட்சரம் இலேட்சுமி தெரிவித்தார்
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு ஆதவு தெரிவித்து, அவரது வீட்டுக்குச் சென்ற பெண்களிடம் உரையாற்றுகை யிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது,
“பெண்களாகிய நாங்கள் சமையலறை முகாமைத்துவம் உட்பட வீட்டு நிர்வாகத்தை நடத்திவருகின்றோம். எனவே, எங்களுக்கு பல அனுபவங்களும் திறமையும் இருக்கின்றது. வீட்டுக்கள் முடங்கியிருந்த எமது திறமைகளை, எமது பிரதேசத்துக்கும் மக்களுக்கும் பயன்படுத்தவேண்டியது எமது கடமையாகும்.
“அந்த வகையில், வீதி அபிவிருத்தி, வடிகான், சுகாதாரம், வீதி மின்சார விளக்கு, என அடிப்படை அபிவிருத்திகள் செய்யப்படவேண்டும்.
“அடிப்படை வசதிகள் எதுவும் சரியான கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. இதற்கு பிரதேச சபை சட்டவரையறையிலுள்ள மிக உச்ச கட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, எமது பிரதேசத்தின் மக்களுக்குச் சேவை செய்ய திட்டமிட்டுள்ளேன்.
“எமது கட்சி, இப்போது ஆட்சியில் உள்ளது. எனவே, இந்த தேர்தலில் நான் வெற்றிபெறுவதன் மூலம், மத்திய அரசாங்கத்திடமுள்ள சலுகைகளைப் பெற்று, அழிந்துபேன எமது பிரதேசத்தை புத்துயிர்பதற்காக அர்பணிப்புடன் சேவையாற்றுவேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .