Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 05 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு இடங்களில் வீடுகளின் ஜன்னல் கிறில்களை கழற்றி உள்ளே நுழைந்து நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களையும் கொள்ளையிட்ட திருடனை ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் திருடனின் வீட்டிலிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பல பொருடகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள வீட்டில் கடந்த மே மாதம் 21ம் திகதி குறித்த திருடன் 25000 ரூபாய் பணம் மணிக்கூடு இமிடேசன் அலங்கார பொருட்கள் மற்றும் நகைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பல இடங்களில் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு பல முறை விளக்க மறியலில் வைக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
4 hours ago