Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் (பி.சி) ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (30) காலை உறுதிப்படுத்தப்பட்டது அதனை அடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் பெருங்குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு மாத்திரம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் சாதாரண குற்றச்செயல்கள் குறித்த முறைபாடுகளை, கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறும், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி விசேட பொலிஸ் பிரிவில் பணியாற்றிவிட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
01 May 2025