2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புனானை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்

கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பால், மட்டக்களப்பு, புனானையில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள், உலருணவுப் பொருள்கள், இன்று (7) கையளிக்கப்பட்டன.

கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பினர், முகாமில் உள்ள இராணுவத்தினரிடம், நிவாரணப் பொருள்களைக் கையளித்தனர்.

இந் நிகழ்வில் கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பின் ஆலோசகரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.றிஸ்வி, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வைத்தியர் எம்.ஐ.எம்.இல்ஹாம், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சி.எம். நியாஸ், உலமா சபையின் கல்குடா கிளையின் செயலாளர் மௌலவி எம்.இஸ்ஸத், அதன் பொருளாலர் மௌளலவி ஏ.இல்யாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்குடா கிளை, கல்குடா வைத்தியர்கள், பிரதேச செயலகங்கள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், ஓட்டமாவடி வர்த்தக சங்கங்கம், மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் இணைந்து,  கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X