Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 16 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா பிரதேசத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை (11) தொடக்கம் காணாமல் போயிருந்த 60 வயதான தாய், நேற்று (15) இரவு கொழும்பில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமது தாய் காணாமல் போனது பற்றி தமிழ் மிரர் இணைய தளம் உட்பட முகநூல்களிலும் தகவல் பரிமாறப்பட்டதையடுத்து, உடனடியாக அவர் கொழும்பிலுள்ள ஒரு வீட்டில் பராமரிக்கப்பட்டு வருவதாக அவ்வீட்டார் தகவல் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்தே தமது தாயை கண்டு பிடித்து அழைத்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது தாய் காணமல் போனது பற்றிய செய்தியை வெளியிட்ட தமிழ் மிரர் இணையதளத்திற்கும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
புன்னைக்குடா வீதியை அண்டி வாழும் சுமத்திரா தங்கவேல் (வயது 60) என்ற 5 பிள்ளைகளின் தாய் காணாமல் போனது பற்றி அவரது பிள்ளைகள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறைப்பாடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .