Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் மூன்றாவது காண்பியக்கலைக் காட்சித்தொடர், மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள பேர்டினன்ஸ் மண்டபத்தில், நாளை (15), நாளை மறுதினம் (16), ஞாயிற்றுக்கிழமை (17) காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்காட்சித்தொடர் குறித்து ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “பெண்களுக்கும் அனைத்து மனிதர்களுக்கும் எதிரான வன்முறைகளற்ற வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது.
“பொதுவாக வன்முறைகளை உருவாக்குவதில் ஊடகங்களுக்கும் கலைகளுக்கும் எவ்வளவு பங்கு இருக்கின்றதோ, அதேயளவு பங்கு வன்முறைகளற்ற வாழ்வை உருவாக்குவதிலும் இருக்கின்றது.
“அத்தகைய மகிழ்வான வாழ்வை உருவாக்குவதில் ஒரு சிறு பங்கு வகிப்பதற்காக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் ஒன்றிணைந்து, “வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்”, என்ற குழுவை உருவாக்கியுள்ளோம். எனவே, அவற்றைக் கண்டுணர்ந்து படிப்பினையைப் பெற வாருங்கள்” என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
14 Jul 2025
14 Jul 2025