2025 மே 08, வியாழக்கிழமை

‘பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாக கருதப்பட வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்பதை உரத்த குரலில் வலியுறுத்த வேண்டுமென, மட்டக்களப்பு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்‪  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடைந்துகொண்ட இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

'அருவி' மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் இன்று (29) தன்னாமுனை மியானி வள நிலைய பயிற்சிக் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மேலும் உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், “இளைய சமதாயத்தினரின் மத்தியில் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.

“இவ்வாறானவர்களைக் கொண்டு, கிராம சமூக மட்டத்தில் அடி நிலையிலுள்ளவர்களின் சமூக விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தும் வண்ணம் மாவட்டச் செயலகத்தின் வேலைத் திட்டங்கள் அமையவிருக்கின்றன.

“இவ்வேலைத் திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் அதிகமதிகம் நடைபெறவுள்ளன.

“அந்த வகையில், அரச அதிகாரிகளும், துறைசார்ந்தவர்களும், சமூக நல உதவு ஊக்க அமைப்புக்களும் ஒன்றிணைந்து சமூகத்துக்குத் தேவையான திட்டங்களை அமுல்படுத்துவதில் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X