Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஜனவரி 06 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியிலுள்ள வேட்பாளர் ஒருவரின் வீடு, வியாழக்கிழமை (04)இரவு இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில், மண்முனைப்பற்று பிரதேசசபையில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் வீடே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று இரவு வெளியில் சென்று வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டதாகவும் வீட்டினுள் பொருட்கள் வீசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் வேட்பாளர் திருமதி சந்திரிகா சோமசுந்தரம் தெரிவித்தார்.
தமக்கு யாரும் எதிரிகள் இல்லாதபோதிலும் தேர்தல் நோக்கம் கொண்டவர்களே தமது வீட்டை உடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவசர பொலிஸ் சேவைக்கு முறைப்பாடுசசெய்யப்பட்டதை தொடர்ந்து, காத்தான்குடி பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .