Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், பேரின்பராஜா சபேஷ்
“முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி. கமலதாஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி. கமலதாஸ் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கட்சி, ஏனைய பல கட்சிகளுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.
“அதனடிப்படையில், அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், எந்தவொரு கட்சியினருடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடன் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“இச்சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம். எனினுத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேசப்பட்ட விடயத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
“இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதில்லை என்றும், இரு கட்சிகளுக்குமிடையில் நல்லெண்ணத்தைப் பேணிக் கொண்டு செயற்படுவதெனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago