Princiya Dixci / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, க.விஜயரெத்தினம்
கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (30) நடைபெறவிருந்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்குக்கு எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸாரால் தொடரப்பட்ட இந்த வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரரான அ.நிதான்சன் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது, நீதிமன்ற தடை உத்தரவை மீறியதான வழக்கை, கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாதெனன மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு, மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago