2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரை கட்டிப்பிடித்தவர் மரணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த நபர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (27) மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கடந்த (15) ஆம் திகதி போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனது குழந்தையை தாக்கி தனக்குத்தானே தீ வைத்த போது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்துள்ளார்.

இச் சம்பவத்தில், தீக்காயங்களுக்குள்ளான நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட ஒரு பிள்ளையின் தந்தையான 37 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .