Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரூக் ஷிகான்
பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றம்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், எவ்வித தயவுதாட்சண்யமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார்.
கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கலந்துரையாடல், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இங்கு உரையாற்றிய எம்.றம்ஸீன் பக்கீர் மேலும் கூறியதாவது;
நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாமனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் குற்றச்செயல்களை செய்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. தற்போது கல்முனை பிரதேசத்தில் குற்றச்செயல்கள் குறைவடைந்தாலும், இன்னும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் இருந்து கொண்டே இருக்கின்றனர். எனவே சமூகத்திலுள்ள நாமனைவரும் இணைந்து, குற்றச்செயல்களை ஒழிப்பதற்கு முயல வேண்டும் என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago