Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், க.விஜயரெத்தினம், அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும், “போதைப்பொருள் பாவனைக்கு எதிராகச் செயற்படுவோம்” என்று, நாளை (03) காலை 8.30 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்யுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரைக்கமைய, நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் அரச காரியாலயங்களிலும் திணைக்களங்களிலும் அமைச்சுகளிலும் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்யவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சகல அரச திணைக்களங்கள், நிறுவனங்களின் தலைவர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago