Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
போஷாக்குத் தன்மை இல்லாத மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளைத் தெரிவு செய்து, அந்தப் பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தன்மையை மேம்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உணவு வழங்கும் திட்டம், நேற்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது .
கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம், மட்டக்களப்பில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், அதிபர் கே. ஸ்ரீதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை, ஆரம்பப் பாடசாலைகளில் போஷாக்குப் பற்றிய கல்வி தொடர்பான இறுவட்டும் மாகாண கல்விப் பணிப்பாளரால், பாடசாலை அதிபருக்குக் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .