2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

புடைவைப் பைகள் அறிமுகம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக புடைவையால் தயாரிக்;கப்பட்ட புடைவைப் பைகள் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே, மேற்படி  பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், 'பொலித்தீன் பாவனையினால் எமது சுற்றாடல் பாதிக்கப்படுகின்றது. அதனால் நாம் பல்வேறு சுற்றாடல் தாக்கங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே, பொலித்தீன்  பாவனையை இல்லாமல் செய்ய வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X