2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பொத்தானைக் கிராமத்தில் குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 15 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, பொத்தானைக் கிராமத்துக்கு இன்று புதன்கிழமை முதல் பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட பொத்தானைக் கிராமத்தில் இரண்டு இடங்களில் 1000 லீற்றர் கொள்ளளவுள்ள இரண்டு நீர்த்தாங்கிகளை வைத்து நீர் விநியோகிப்பதாக அப்பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸாபி தெரிவித்தார்.

குடிநீருக்காக தாம் நீண்டதூரம் அலைய வேண்டியுள்ளதாகவும் ஆகவே, குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிடம் பொத்தானைக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்தே, இக்கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின்போது பொத்தானைக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தங்களின் சுயமுயற்சியால் மீள்குடியேறி வருகின்றனர். இதுவரையில் அங்கு 67 முஸ்லிம் குடும்பங்களும் 40 தமிழ்க் குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X