Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கமநலச்சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கமநலச்சேவை திணைக்களம் வழங்கிய ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் விண்ணப்பம் கோரப்பட்டு இங்குள்ள இளைஞர்,யுவதிகள் விண்ணப்பித்திருந்தனர்.அது தொடர்பான நேர்முகப்பரீட்சை இரண்டு தடவைகள் இரத்துச்செய்யப்பட்டன.இறுதியாக எழுத்துப்பரீட்சை ஒன்றின் மூலம் அந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 99பேர் நியமனம் பெற்றுள்ளார்கள்.இந்த நியமனத்தில் ஏறக்குறைய 75பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களாகவும் 20பேர் தமிழர்களாகவும் நான்கு பேர் முஸ்லிம்களாகவும் உள்ளனர்.
இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும் என்றார்.
மேலும்,மட்டக்களப்பு மாவட்டம் 99வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும்.இவர்கள் விவசாயம் தொடர்பில் ஆராயவேண்டியதாக இந்த நியமனதாரிகள் செயற்பட வேண்டும்.
பெரும்பான்மையின உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி தெரியாது.இவர்கள் விவசாயிகளுடன் கதைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய தேவைப்பாடும் உள்ளது.
எனவே, புதிதாக நியமிக்கப்பட்ட பெரும்பான்மை உத்தியோகத்தர்களை சிங்கள பகுதிகளுக்கு அனுப்பிவிட்டு தமிழ் பேசுபவர்களை நியமிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
53 minute ago
6 hours ago