2025 மே 08, வியாழக்கிழமை

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

 'வலுவற்ற மக்களின் மனித மாண்மை மேம்படச் செய்து, வறுமையற்ற நிலையை உருவாக்குதல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு தலைமை வைத்திய அதிகாரி டாக்டர் டபிள்யூ டி ஐ.சாம குணதிலக தமையில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புற்றுநோய் என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகின்றது?  மட்டக்களப்பு மாவட்டத்தில் அதன் தாக்கம், இந்நோயைக் குறைக்கும்; வழிவகைகள் என்பன குறித்து மிக விளக்கமாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்திக் இயக்குநர் அருட்பணி. ஜிரோன் டீ லிமா  தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் புற்நோய் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை விழிப்படைய செய்யும் வகையில் தொடர்ச்சியாக இவ்வாறான கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X