Niroshini / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுவந்த நிலையில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர்களான விமலரத்ன, ரீ.மேனன், பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.எல்._னைட் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளதுடன் ,அவரிடம் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம், பத்து நீர் குழாய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago