Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆர்.ஜெயஸ்ரீராம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் சமீப நாள்களில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பெருக்கு என்பனவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை, வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளமும் வடிந்துகொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களின் பாதிப்பின் தன்மை, இயல்பு வாழ்க்கை என்பனவற்றை அறிந்து கொள்வதற்காக, மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், மாவட்ட இடர் முகாமைத்து நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். சியாத் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், நேற்று (24) கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
கரவெட்டியாறு, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளுக்குச் சென்று, அதிகாரிகள் நிலைமைகளை அவதானித்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத் தங்கல் நலன்புரி நிலையங்களில் தங்கியவர்களும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்களும் படிப்படியாக தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வருட வடகீழ்ப் பருவ பெயர்ச்சிக் காலநிலையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 6,287 குடும்பங்களைச் சேர்ந்த 21,104 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என, இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
56 minute ago