2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் கடும் உஷ்ணம்

Editorial   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் உஷ்ணமான கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்  பாதிப்படைந்துள்ளது. நகரில் முக்கிய தேவைகளுக்காக வரும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிக உஷ்ணம் காரணமாக வயோதிபர்கள, நோயாளிகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டு  சுற்றுலாப்  பயணிகள்  மர நிழல்களில்  ஒதுங்கி  இருப்பதை  காணக் கூடியதாக உள்ளது.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய பொதுமக்கள் நண்பகல் வேலைகளில் வெளியில் நடமாட வேண்டாம் என தெரிவித்திருந்த  போதும்  அதிகமான  மக்கள்   தங்களது  தேவைகளை  நிமித்தம் நருக்கு  வருகை  தந்திருப்பதை  காணக்கூடியதாக  இருக்கிறது.

தற்போது மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணமாக கால நிலையினால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளது இதே வேளை மாவட்டத்தில் பயன் தரும் வாழை, மா மற்றும் தெங்கு  பயிற் செய்கையும் அதிக உஷ்ணம்  காரணமாக  பாதிப்படைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்னை மரங்களின் இலைகள் கருகுவதுடன் அதன் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தேங்காயின்  விலைகளும் அதிகரித்து உள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .