2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை இல்லை; மக்கள் பீதியடைய வேண்டாம்’

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், வ.துசாந்தன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடற் கரையேரதை அண்டிய பகுதியில் சுனாமி வரப்போகின்றது என்கின்ற பீதி, இன்று (15) காலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறுகின்ற நிலமையும் ஏற்பட்டுள்ளது.

இங்கும், கரையோரத்திலுள்ள கிணறுகளின் நீர் மட்டம் திடீரென வற்றியுள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் மக்கள் மத்தில் சுனாமி என்ற பீதி ஏற்பட்டு மக்கள் பீதியடைந்துள்ளார்கள்.

“இதுவரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மக்கள் வதந்திகளைக் கேட்டு அச்சமடையத் தேவையில்லை.

எனவே, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அச்சம் கொண்டு பீதியடைந்து அல்லோலகல்லோலப்பட வேண்டாம்” என, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.சி.முகமட் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X