Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பொன் ஆனந்தம் / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரசித்திபெற்ற வெருகலம்பதி முருகனாலயம், வெள்ள நீரில் அகப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் க.குணநாதன் தெரிவித்தார்.
அலயத்துக்கும் மாவடிச்சேனைக்குமிடையில் உள்ள நெடுஞ்சாலையை ஊடறுத்து ஓர் அடி உயரத்தில் வெள்ள நீர்பாய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மட்டக்களப்பு - திருகோணமலைக்கிடையில் பயணத்தை மேற்கொள்ளும் வாகனங்கள், பயணிகள் அவதானத்துடன் செல்லுமாறு, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாவலி கிளைகளில் ஒன்றான வெருகல் கங்கையின் வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்நிலமை ஏற்பட்டுள்ளது.
மாவடிச்சேனையில் பாயும் வெள்ள நிலமையால், கங்கையைச்சூழவிருந்த விவசாயிகள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனைப் பாடசாலையில் தங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .