2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுகிறார்

எஸ். பாக்கியநாதன்   / 2017 ஜூலை 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க, தனது 36 வருட கால பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அவருக்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நேற்று (25) நடைபெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பொலிஸாரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை, அவர் ஏற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராச்சி, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X