2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. செயலகத்தில் ஊழல்: விசாரணை நடத்துமாறு முறைப்பாடு

வடிவேல் சக்திவேல்   / 2017 ஜூலை 27 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுவரும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் நேற்றுப் புதன்கிழமை  (26)  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோர், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்று குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அவற்றில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முறைகேடுகள் பட்டியலிடப்பட்டு, அது தொடர்பான ஆவணங்களும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X