2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மட்டு. போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இப்றாலெப்பை மீண்டும் நியமனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக, வைத்தியக் கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் (13) அவர், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமைபுரிந்த வைத்தியர் இப்றாலெப்பை, சமீப சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றுச் சென்றிருந்த நிலையில், மீண்டும் அவருக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியர் இப்றாலெப்பையை, ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிப்பாளராக நியமித்ததைக் கண்டித்தும் தற்போதைய பணிப்பாளர் டொக்டர் திருமதி கலாரஞ்சனியே பணிப்பாளராக இருக்க வேண்டுமென வலியுறுத்தியும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள், நாளைய தினம் (14) காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனரென, ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதாரச் சேவைகள் சங்கத்தின் செயலாளர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும், இந்தப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதெனத் தீர்மானித்துள்ளதாகவும் இதனால், அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து, இந்தப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .