Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
தற்போதைய புதிய அரசாங்கம், ஒன்றரை மாத காலத்துக்குள் 69 கோடி ரூபாய் நிதியை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
இன்று (31.12.2019) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
ஒன்றரை மாத காலத்துக்குள்ளேயே 69 கோடி ரூபாய் நிதியை சப்ரிகம நிறைவான ஒரு கிராமம் எனும் தொனிப் பொருளிள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் இருபது இலட்சம் ரூபாய் நிதியெனும் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலுள்ள 345 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 69 கோடி ரூபாய் நிதி முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை, சுகாதாரம், வீதிகள், கால்வாய்கள், வனவிலங்கு தொடர்பான விடயங்கள், வடிகான்கள் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன் மூலம் மேற் கொள்ளமுடியும்.
ஆகவே, இந்த முதல் கட்ட அபிவிருத்தி வேலைத் திட்டத்தை மிகவும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களுக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகமாகச் சென்று அந்தந்த பிரதேச செயலாளர் தலைமையில் அத்தனை கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய திணைக்கள தலைவர்களையும் அழைத்து இந்தத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டலை மேற் கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் இந்தத் திட்டங்கள் எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டு பிரதேச செயலகத்துக்கூடாக மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
21 minute ago