Suganthini Ratnam / 2016 ஜூன் 20 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் உள்ள வளவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (19) மாலை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வளவில் வீடு கட்டுவதற்காக அத்திபாரம் வெட்டியபோது, நிலத்தில் புதைக்கப்பட்ட இந்த ஆயுதங்கள் தென்பட்டுள்ளன. அவை பொலித்தீன் பைகளினால்; சுற்றப்பட்;ட நிலையில் இருந்ததுடன், துருப்பிடித்துக் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ரி -56 ரக துப்பாக்கிகள் நான்கு, மகசின்கள் எட்டு, ரி-56 ரக துப்பாக்கிகளுக்கான ரவைகள் 210 ஆகியவையே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இப்பகுதிக்கு இந்த ஆயுதங்களைக் கொண்டுவந்து மறைத்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago