Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
உலக ஈரலிப்பு பாதுகாப்புத் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஈரவலயம் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் இயலளவு விருத்தி மற்றும் பயிற்சி அதிகாரி ஏ.அரியசுதன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக சத்துருக்கொண்;டான் வாவிக்கரையோர சதுப்பு நிலமும் பல்லின உயிரின வளர்ச்சி ஈரநிலங்களையும் துப்புரவு செய்யும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். அதில் ஈரநிலங்கள் பில்லியன் வாழ்வாதாரங்களுக்கு அதிகமாக எமக்கு வாழ்வளிக்கின்றன, ஈரநிலங்களில் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிராகக் குரலெழுப்புவோம், அதனை அழுக்குகளால் நிரப்பாது பாதுகாப்போம் போன்ற விவரங்கள் அடங்கியிருந்தன.
ஐக்கிய நாடுகள் யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago