2025 மே 21, புதன்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 21 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-v];.vk;.vk;.Ku;\pj;

வாழைச்சேனைப் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை வாழைச்சேனைப் பொலிஸார் இன்று(21) கைது செய்துள்ளனர்.

இவர்கள் வட்டவான், பாலைநகர், புணாணை போன்ற பகுதியிலுள்ள ஆற்றின் மணலை சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது பொலிஸார் கைது செய்ததாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மேலும், இவர்கள் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 3 உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .