Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குறாணை, மாதுறுஓயா ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேரை, இன்று (24) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 03 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மாதுறுஓயா ஆற்றுப் பகுதியில் சுற்றிவலைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினரால் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும், சந்தேக நபர்களும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago