Gavitha / 2016 ஜூன் 11 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

த.தவக்குமார்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தை பிரதேச வாவியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை பொலிஸார் இன்று சனிக்கிழமை (11) கைது செய்துள்ளனர்.
மண்டூர் பிரதேச வாவிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுவபர்களை கைதுசெய்யக்கோரி அப்பிரதேச மீனவச்சங்கங்கள் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் கோரியிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரின் பணிப்புரையின் பேரில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு மற்றும் வெல்லாவெளி பிரதேச கடற்றொழில் பரிசோதகர், மண்டூர் மீனவ சங்கங்களின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, எட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் இருந்த மற்றைய சில மீனவர்கள், சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்று விட்டனர்.
எனினும் மீனவர்களால் கைவிடப்பட்டிருந்த சுமார் 2 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய மீன்பிடி தோணிகள் மற்றும் வலைகளை கைப்பற்றிய பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago