Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026