2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மரக் கன்றுகள் நடுகை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 05 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

உலக சுற்றாடல் வாரத்தையிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகார சபை அலுவலகமும் கோறளைப்பற்று பிரதேச சபையும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டது.

கோறளைப்பற்று பிரதேச சபை நூலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், 'வனஜீவராசிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராக எழுவோம்' என்ற தொனிப்பொருளில் வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களினால்; வீதி நாடகமும் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இடம்பெற்றது.  

கோறளைப்பற்று பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி எஸ்.தட்சாயினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயிஸ், கோறளைப்பற்று பிரதேச சபை நூலகர் கே.ருத்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X