Freelancer / 2023 ஜனவரி 31 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்றில் 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
14 வருடங்களாக நடத்தப்பட்ட ஜூரி விசாரணையைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதியை விடுவித்துள்ளது.
1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி அக்கரைப்பற்றில் நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டி பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, பிரதிவாதிக்கு 10 ஜூன் 2009 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஜூரி விசாரணையின் முடிவில், அந்த தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
14 வருட ஜூரி விசாரணையின் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரதிவாதியை விடுதலை செய்தது. R
16 minute ago
42 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
42 minute ago
53 minute ago
59 minute ago